குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என சென்னை உள்பட சில இடங்களில் போராட்டம் நீடிக்கிறது.
இந்நிலையில் பிப்ரவரி 16-ம் தேதி வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
பிரதமர் மோடி பேசுகையில், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய முடிவுகளை எனது அரசு எடுத்து வருகிறது. இனிமேலும் எடுக்கும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவு நீக்கமாக இருந்தாலும் சரி, குடியுரிமை திருத்த சட்டமாக இருந்தாலும் சரி, இவை நாட்டுக்கு நன்மை அளிக்கக்கூடியவை. இந்த முடிவுகள் எடுப்பதற்காக நாடு நீண்ட காலமாக காத்திருந்தது.
எனவே, அனைத்து பக்கங்களில் இருந்து வரும் அழுத்தங்களை மீறி, நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து உறுதியாக இருப்போம். இந்த முடிவுகளை வாபஸ் பெறப் போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.