3 உதவி இயக்குநர்கள் உயிரிழப்பு; இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி…?

Read Time:4 Minute, 0 Second
Page Visited: 74
3 உதவி இயக்குநர்கள் உயிரிழப்பு; இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி…?

நடிகர் கமல்ஹாசன், சங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார்.

2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியன்-2 மற்றும் தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் கமல் நடித்து வருகிறார்.

இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் கமலும் கலந்துகொண்டார், நேற்று இரவு, படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது.

இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளை பார்க்கும் கூடாரம் மீது விழுந்துள்ளது. அந்த பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் படுகாயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ராட்சத கிரேனில் அதிக எடைகொண்ட லைட்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரத்தை குறைக்காமல் கிரேனை இயக்கியது விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் விபத்துக்கு காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை.

நடிகர் கமல் படப்பிடிப்பை முடித்துவிட்டு சற்று தள்ளி நின்றதால் அவருக்கு பாதிப்பு இல்லை.

இயக்குநர் சங்கருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அத்த தகவலில் உண்மை இல்லை எனவும் வதந்திகளைப் பரப்பவேண்டாம் எனவும் படக்குழுவினர் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த விபத்து ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கமல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியைவிட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவு செய்துள்ள்ளார்.


மற்றொரு பதிவில், மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும். என பதிவிட்டுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %