குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் – டொனால்டு டிரம்ப்

Read Time:1 Minute, 33 Second

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருநாள் பயணம் மேற்கொண்ட டொனால்டு டிரம்ப் இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அப்போது இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான கேள்வி எழுப்பட்டது.

கேள்விக்கு பதில் அளித்து பேசிய டொனால்டு டிரம்ப், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நான் எந்தஒரு கருத்தையும் தெரிவிக்கமாட்டேன். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அவர்கள் சரியானதையே செய்வார்கள் என நம்புகிறேன். பிரதமர் மோடியிடமிருந்து எனக்கு மிகவும் சக்திவாய்ந்த பதில் கிடைத்தது. அவர்கள், இந்தியாவில் சிறுபான்மையினருடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள் என்று அவர் என்னிடம் கூறினார்” என்றார்.

டெல்லி வன்முறை தொடர்பான கேள்விக்கும், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துவிட்டார்.