காற்று மாசு: உலகின் மோசமான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்…!

Read Time:1 Minute, 53 Second
Page Visited: 85
காற்று மாசு: உலகின் மோசமான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்…!

IQAir Air Visual வெளியிட்டுள்ள உலக காற்று தர அறிக்கை 2019-ல் உலகின் மோசமான காற்று மாசு நிறைந்த 30 நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 21 நகரங்கள் உள்ளதாகவும், காசியாபாத் நகரம் (உத்தரபிரதேச மாநிலம்) முதலிடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் ஹோடான் நகரம் 2–வது இடத்தையும், பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, பைசலாபாத் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களையும், டெல்லி 5–வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய அளவில் வரிசைப்படி, காசியாபாத், டெல்லி, நொய்டா, குருகிராம், கிரேட்டர் நொய்டா, பந்த்வாரி, லக்னோ, புலந்த்‌ஷர், முசாபர்நகர், பாக்பாத், ஜிந்த், பரிதாபாத், கோரவுட், பிவாடி, பாட்னா, பல்வால், முசாபர்பூர், ஹிசார், குடைல், ஜோத்பூர் மற்றும் மொராதாபாத் ஆகிய நகரங்கள் பிடித்து உள்ளது.
நாடுகள் அளவிலான தகவலில் இந்தியா 5–வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் முதலிடத்திலும், அடுத்த இடங்களில் பாகிஸ்தான், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் நாடுகளும் உள்ளன.

இந்திய நகரங்கள் முந்தைய ஆண்டை காட்டிலும் முன்னேறி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் மோசமான காற்று மாசு நிறைந்த தலைநகரங்கள் பட்டியலில் டெல்லிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %