டெல்லி வன்முறை: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி வலியுறுத்தல், பா.ஜனதா பதில்

Read Time:4 Minute, 30 Second
Page Visited: 71
டெல்லி வன்முறை: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி வலியுறுத்தல், பா.ஜனதா பதில்

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பார்கள் இடையே கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள், போலீசார் காயமடைந்து உள்ளனர். கலவரம் விவகாரத்தில் மத்திய அரசை அரசியல் கட்சிகள் கார்னர் செய்து வருகின்றன.

கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “கலவரத்துக்கு மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்,” என வலியுறுத்தினார்.

வன்முறைக்கு பின்னால் ஒரு சதி உள்ளது. டெல்லி தேர்தல்களின் போது நாடும் இதை கண்டது. பல பாஜக தலைவர்கள் பயம் மற்றும் வெறுப்பின் சூழ்நிலையை உருவாக்கும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர் எனவும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

சோனியா காந்திக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், டெல்லி கலவரத்தை பற்றிப் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கலவரத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது. காங்கிரஸ் கைகளில்தான் சீக்கியர்கள் ரத்தக்கறை படிந்துள்ளது.

சீக்கியர்களை கொன்று குவித்தவர்கள்தான் வன்முறையை நிறுத்துவது குறித்தும், வெற்றி குறித்தும் பேசுகிறார்கள். அமித் ஷா எங்கே என்று காங்கிரஸ் கேட்கிறது. அவர், அனைத்துக்கூட்டத்தில் நேற்று ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன்தான் பங்கேற்றார். டெல்லி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமித் ஷா போலீசாருடன் இணைந்து தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்.

காங்கிரஸ் தலைமைதான் போலீசாரின் மனஉறுதியை குலைக்கும் வகையில் பேசுகிறது. சோனியாவின் இதுபோன்ற கருத்துக்களும், அரசியலும் போலீசாரின் மனஉறுதியை உயர்த்த உதவாது. வன்முறை முடிவுக்கு வந்துவிட்டது. கலவரம் குறித்து விசாரணை நடக்கும் போது, உண்மை வெளிவரும். இந்த விஷயத்தில் தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள். கலவரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தும்போதுதான் யார் கற்களை கொண்டுவந்தது, துப்பாக்கியால் சுட்டது, வாகனங்களுக்கு தீ வைத்தது, மக்களை தூண்டிவிட்டது போன்ற உண்மைகள் தெரியவரும்.

உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலில் மத்திய அரசை விமர்சிப்பதும், வன்முறையை அரசியலாக்குவதும் நாகரிகமற்ற அரசியல், அசிங்கமான அரசியல். டெல்லியில் அமைதியை கொண்டு வருவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதற்காகவே காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கூட்டத்தையும் அமித் ஷா கூட்டியுள்ளார் எனக் கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %