ஒவ்வொரு நாளும் கடினமாகிறது… சீன செவிலியர்கள் கோரிக்கை

Read Time:3 Minute, 8 Second

சீனாவில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்கள், புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீன அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸினால் மருத்துவ ஊழியர்கள் மிகவும் கடினமான நிலையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் சீனாவின் உகான் நகரிலுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் இரு செவிலியர்கள் ஒவ்வொரு நாளும் கடினமாகிறது, எங்களுக்கு உதவுங்கள் என சர்வதேச மருத்துவ ஊழியர்களுக்கு கோரிக்கையை விடுத்து உள்ளனர்.

தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ இதழில் சீன செவிலியர்களான யிங்சுன் ஜெங் மற்றும் யான் ஜென் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நகரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 14000 செவிலியர்கள் அன்றாடம் கடினமான நிலையை எதிர்க்கொள்கின்றனர் மற்றும் உடல், மன சோர்வை எதிர்கொள்கின்றனர். உகானில் சுகாதார பராமரிப்பு நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக சீனா முழுவதிலும் இருந்து 14000 செவிலியர்கள் தானாக முன்வந்து உகானுக்கு வந்துள்ளனர். ஆனால், எங்களுக்கு இன்னும் அதிகமான உதவி தேவை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் எங்களுக்கு உதவ, உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை இப்போது சீனாவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

சீனாவில் புதன்கிழமை வரையில் வைரஸ் பாதிப்புக்கு 2718 பேர் உயிரிழந்து உள்ளனர். 78000-க்கும் அதிகமானவர்கள் பாதித்து உள்ளனர். 3200 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு செவிலியர்களும் வைரஸ் பாதிப்பு எப்படியிருக்கிறது என்பது தொடர்பாகவும் கடிதத்தில் எழுதியுள்ளனர்.

அதில், உகானில் நிலைமைகளும், சூழலும் நினைத்ததை விட மிகவும் கடினமானவை, தீவிரமானவையாக உள்ளது. N95 சுவாச கருவிகள், முக கவசங்கள், கண்ணாடி, கவுன் மற்றும் கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது. கண்ணாடிகள் பிளாஸ்டிக்கால் ஆனவை, அவை வார்டில் மீண்டும் மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்த வேண்டும், இதனால் பார்ப்பது கடினம் எனவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளனர்.