தி.மு.க. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது கருத்து திருட்டு புகார் என்ன?

Read Time:2 Minute, 59 Second
Page Visited: 51
தி.மு.க. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது கருத்து திருட்டு புகார் என்ன?

இந்தியாவில் பிரபலமான அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தேர்தல்களில் பல்வேறு கட்சிகளின் வெற்றிக்காக வியூகம் வகித்தவர். அவர், தற்போது மேற்கு வங்காளத்தில் மம்தாவிற்கும், தமிழகத்தில் திமுகவிற்கும் தேர்தல் வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறார். கிஷோர் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தார். ஆனால், குடியுரிமைச் சட்டம், என்.ஆர்.சி. விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் உடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறினார்.
புகார் என்ன?

தற்போது பீகாரில் அரசியல் பிரவேசம் எடுத்து உள்ளார். அம்மாநிலத்தில் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ‘பாத் பீகார் கி’ அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுபயணத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின் வளர்ச்சி அடைந்த முதல் பத்து மாநிலங்கள் பட்டியலில் பீகாரை கொண்டு வரவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வது ஆகும். நூறு நாட்களுக்குள் குறைந்தது 10 மில்லியன் பீகார் இளைஞர்களை சந்திக்கும் வகையில் இந்த அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் பிரசாரத்திற்கான கருத்துக்களம் என்னுடைய திட்டத்திலிருந்து திருடப்பட்டது என கவுதம் என்ற இளைஞர் பாடலிபுத்திரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருக்கும் கவுதம் அளித்து உள்ள புகாரில், என்னுடைய பிரசாரத்திற்காக உருவாக்கிய கருத்துக்களத்தின் உள்ளடக்கத்தை கிஷோர் பயன்படுத்தி வருகிறார். என்னுடைய முன்னாள் உதவியாளர் ஒசாமா பிரசார திட்டத்தின் உயிர்கருத்தை கிஷோருக்கு கொடுத்து உள்ளார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் மீது 420(cheating and dishonesty), 406 (criminal breach of trust) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %