இந்தியாவை வேறு திசையில் கொண்டு செல்ல பா.ஜனதா முயற்சிக்கிறது – குஷ்பு குற்றச்சாட்டு

Read Time:2 Minute, 33 Second
Page Visited: 98
இந்தியாவை வேறு திசையில் கொண்டு செல்ல பா.ஜனதா முயற்சிக்கிறது – குஷ்பு குற்றச்சாட்டு

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு பிப்ரவரி 26-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என பா.ஜனதா கூறுகிறது. ஆனால், மக்களை அழைத்துப்பேச மத்திய அரசு தயாராக இல்லை. டெல்லியில் பெரும் கலவரம் நடந்துகொண்டு இருக்கும்போது டொனால்டு டிரம்ப் வந்ததால் கவனிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.

உள்துறை அமைச்சர் இதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நாடு முழுவதும் போராட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பேசவே இல்லை என பிரதமர் கூறுகின்றார். ஆனால், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார். பிரதமர்-உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் யார் பொய் பேசுகின்றனர்? என்று தெரியவில்லை.

நாடு முழுவதும் மத ரீதியாக மக்களை பயமுறுத்த தொடங்கி உள்ளனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக பேசிய பா.ஜனதா தலைவர்கள், பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை?. டெல்லி போலீஸ் என்ன செய்துகொண்டு உள்ளது? நாடு எந்த திசையில் போகிறது?. எந்த திசையில் போக உள்ளது? என்பதை பார்க்கும்போது பயமாக உள்ளது. அமைதி பூங்காவாக உள்ள இந்தியாவை வேறு திசையில் ஏன் கொண்டு செல்ல நினைக்கிறீர்கள்?. குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி கேள்வி கேட்டு மக்கள் போராடுகின்றனர். பதில் சொல்ல தெரியாததால் பதிலளிக்க மறுக்கின்றனர் எனக் கூறிஉள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %