நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல் என்பார்கள்… ரஜினி பேசியதும், கமல் பதிலும் என்ன?

Read Time:6 Minute, 38 Second
Page Visited: 45
நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல் என்பார்கள்… ரஜினி பேசியதும், கமல் பதிலும் என்ன?

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 26 மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசினார். அவருடைய பேட்டி விபரம்:-

செய்தியாளர் கேள்வி :- தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று சொன்னீர்கள். உங்கள் குரல் இன்னும் ஒலிக்கவில்லை என்று பலரும் சொல்கிறார்களே ஏன்?

பதில்:- குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நான் நிற்பேன் என்று சொல்லியிருந்தேன். இந்திய இஸ்லாமியர்கள் யாருக்கும் பாதிப்பு கிடையாது.

டெல்லியில் நடக்கும் போராட்டம் உளவுத்துறையின் தோல்வியால் நடக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசை வன்மையாக நான் கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்ப் இந்தியா வருகை புரிந்த நேரத்தில் இப்படி நடந்து உள்ளது. இதில், மத்திய அரசு எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்.? உளவுத்துறை தனது பணியை சரியாக செய்யவில்லை. இரும்பு கரம் கொண்டு அந்த போராட்டத்தை அடக்கி இருக்க வேண்டும். இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- டெல்லியில் நடந்த போராட்டத்தில் பலர் பலியாகி இருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- மத்திய அரசின் உளவுத்துறையும், உள்துறை அமைச்சகமும் தோல்வி அடைந்து இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

கேள்வி:- குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து பலரும் அரசியல் செய்கிறார்கள் என்று பேசப்படுகிறது. இப்படிப்பட்ட அரசியலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- இதனை வன்மையாக நான் கண்டிக்கிறேன். கட்சிகளும், சிலரும் மதத்தையும், மதத்தினரையும் தூண்டுகோலாக வைத்து அரசியல் செய்கிறார்கள். இது சரியான போக்கு கிடையாது. இரும்பு கரம் கொண்டு மத்திய அரசு இதனை சீர் செய்யவேண்டும். அப்படி அவர்கள் ஒடுக்கவில்லை என்று சொன்னால், எதிர்காலம் ரொம்ப கஷ்டம் ஆகிவிடும்.

கேள்வி:- இஸ்லாமியர்கள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்கிறீர்களா?

பதில்:- தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு தெளிவாக சொல்லிவிட்டது. அதைப்பற்றி மறுபடியும் குழம்பிக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? போராட்டத்தினால் ஏற்படும் வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம். ஆனால் அதில் வன்முறை என்பதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது என்னுடைய வேண்டுகோள்.

பா.ஜ.க.வின் ஊதுகுழலா?

கேள்வி:- மத்திய மந்திரிகள், “தேசத்தின் எதிரிகளை குண்டுகளால் சுடுங்கள்” என்று சொல்லி வருகிறார்களே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:-

யாரோ ஒருவர் பேசுவதால், எல்லோரும் பேசுவதாக பழியாகிவிடுகிறது. ஊடகங்களை கை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் நீங்கள்தான் உறுதுணையாக இருக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் வழங்கி, சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் அது சட்டமாகவும் வந்துவிட்டது. இதை திரும்பி வாங்க மாட்டார்கள்.

என்ன போராட்டம் செய்தாலும், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது என்னுடைய கருத்து. உடனே நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல், பா.ஜ.க. என் பின்னால் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். அதிலும் சில மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் அப்படி சொல்வது வேதனையாக இருக்கிறது. நான், எது உண்மையோ?

அதை சொல்கிறேன் என்றார்.

கமல் டுவிட்

ரஜினியின் பேட்டியில் உண்மையை சொன்னால் பா.ஜனதா ஆள் என்கிறார்கள். வருத்தமாக இருக்கிறது என்று கூறி, மத்திய அரசை கண்டிப்பதாகவும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேட்டி வெளியான ஒரு மணிநேரத்திற்குள் கமல், ரஜினியை வாழ்த்தி ‘சபாஷ் நண்பரே’ என்று டுவீட் செய்தார்.

“சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துகள்”. என பதிவிட்டார் கமல்ஹாசன்.


கமலின் இந்தக் கருத்து மீண்டும் இருவரும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவார்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது பார்க்கப்படுகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %