திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு

Read Time:2 Minute, 47 Second
Page Visited: 72
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கொட்டாரம் 100 கால் மண்டபம் அருகே உள்ள காலி இடத்தை தூய்மை செய்து அங்கு வாழைக்கன்றுகள் நடவும், பூச்செடிகள் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணியில் பிப்ரவரி 26-ம் தேதி கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். .

அங்கு குழி தோண்டிய போது, வித்தியாசமாக சத்தம் கேட்டதும் பணியாளர்கள் மெதுவாக தோண்டியபோது, செம்பு பெட்டகம் ஒன்று காணப்பட்டு உள்ளது. பெட்டகத்தை எடுத்து பார்த்தபோது, அதில் தங்கக்காசுகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில் கலயத்தில் இருந்த தங்கக்காசுகள் எடுத்து எண்ணப்பட்டன.

அந்த பெட்டகத்தில் 505 தங்கக்காசுகள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவற்றில் ஒரு தங்க காசு மட்டும் 10 ரூபாய் நாணயம் அளவிலும், மீதமுள்ள தங்க காசுகள் சட்டை பட்டன் அளவிலும் இருந்தது. இது 1 கிலோ 704 கிராம் எடைகொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.61 லட்சம் ஆகும். ஒவ்வொரு தங்க காசும் 3.3 கிராம் எடை உள்ளது. ஒன்று மட்டும் 10 கிராம் எடை உள்ளது என கூறப்படுகிறது. பின்னர் பெட்டகம் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தங்கக்காசுகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவை என்பது தெரியவில்லை. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே அது, எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது. திருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னும் புதையல் சிக்க வாய்ப்பிருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, காலியான இடத்தை முழுமையாக தோண்டி ஆய்வு செய்திட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %