வடசென்னை படுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறு… ஆண்ட்ரியா வருத்தம் ஏன்?

Read Time:2 Minute, 6 Second

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா படுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறாக போய்விட்டது என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று கொடுக்கும் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆண்ட்ரியா. பாடகியான ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

வடசென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா படுக்கையறை காட்சியில் மிக நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் சமூக வலைத்தளங்களில் லீக்கானது. தற்போது ஆண்ட்ரியா மாளிகை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தது தவறாக போய்விட்டது. அதன்பின்னர் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே பெருமளவில் வருகிறது என தெரிவித்து உள்ளார்.

மேலும் நல்ல கதை, கதாபாத்திரம் ஆகியவை அமைந்தால் சம்பளத்தை குறைத்து கொண்டு நடிக்க தயார் எனவும் கூறியுள்ளார்.