மாதவரம் ரசாயண ஆலையில் பெரும் தீ விபத்து…

Read Time:1 Minute, 30 Second

திருவள்ளூவர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயண ஆலையில் பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் இரண்டு ஏக்கர் அளவில் பரந்து காணப்படும் பெயிண்ட் தயாரிக்கும் ஆலையில் ஆயில், ரசாயணப் பொருட்கள் இருந்து உள்ளது. பிற்பகல் 3.30 மணி அளவில் ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது.

ஆலையில் வெடிப்பு சத்தத்துடன் பெரும் புகையுடன் தீப்பற்றி எரிகிறது. தீயை அணைக்க சுமார் 15-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்கிறார்கள்.

அங்கிருந்து வெளியேறும் கரும்புகையினால், அப்பகுதி மாலையில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதற்கிடையே கண் எரிச்சல் இருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் தான் ஆந்திரா மற்றும் திருப்பதிக்கு செல்லும் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதா மற்றும் சேத மதிப்பீடு குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.