விமான நிலையத்தில் பெண்களுக்காக பிரத்யேக கால்-டாக்ஸி சேவை…!

Read Time:4 Minute, 7 Second

டெல்லி விமான நிலையத்தில் இப்போது அனைத்து பெண்களுக்குமான பிரத்யேக கால்-டாக்ஸி சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பை உணர வைக்கும் முயற்சியில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு தனியார் அமைப்பின் அனைத்து பெண்கள் கால்-டாக்ஸி சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.

‘Women with Wheels’ என்ற தலைப்பில் இந்த சேவையை டெல்லியின் எந்த பகுதிக்கும் பெறலாம். இது விமான நிலையத்தில் தூண் எண் 16 க்கு அருகிலுள்ள கியோஸ்கிலிருந்து இயங்குகிறது.

பெண்களுக்கான கால் டாக்ஸி சேவையை வழங்கும் Sakha Consulting Wings நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் வதேரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், இந்த டாக்ஸிகள் பெண்கள் பயணிகளுக்காக மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், ஆசாத் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருந்து பணியமர்த்தப்பட்ட பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படுகின்றன” என்று கூறிஉள்ளார். இந்த கால் டாக்ஸியில் ஒரு பெண் அல்லது பெண்களுடன் வந்தால் மட்டுமே ஆண்கள் வண்டியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியில் உள்ள பெண்களுக்கு தொழில்முறை ஓட்டுநர்களாக ஆக ஆசாத் அறக்கட்டளை Azad Foundation பயிற்சி அளிக்கிறது. அங்கு பயிற்சி பெற்ற பெண் ஓட்டுநர்களில் ஒருவர் பேசுகையில் “இப்போது நான் என் சொந்த காலில் நிற்கிறேன். நான் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். நான் இப்போது என் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்கிறேன், ”எனக் கூறியுள்ளார்.

இப்போதைக்கு நிறுவனம் 10 டிரைவர்களுடன் 20 கார்களின் சேவை உள்ளது. விரைவில் இது விஸ்தரிக்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வதேரா மேலும் பேசுகையில், நகரங்களில் கால் டாக்ஸிகளில் பயணம் செய்யும் போது சங்கடமாக இருக்கும் பெண்களை பார்ப்பதிலிருந்து இதுபோன்ற சேவையை தொடங்கும் யோசனை வந்ததாக கூறுகிறார். “பொதுவாக, தாமதமாக விமான நிலையத்தில் இறங்கும் பெண்கள் டாக்சிகளை வாடகைக்கு எடுக்கும் போது சங்கடமாக உணர்கிறார்கள். எனவே பெண்கள் பாதுகாப்பாக உணர அவர்களுக்கு பிரத்யேக சேவையை தொடங்க முடிவு செய்தோம்,” எனக் கூறியுள்ளார்.

ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வதேரா கூறுகையில், “வண்டிகளில் ஜி.பி.எஸ் மற்றும் எச்சரிக்கை பொத்தான் நிறுவப்பட்டுள்ளன. எனவே, ஓட்டுநர் அல்லது பயணிகள் பாதுகாப்பு தேவையை உணர்ந்தால், அவர்கள் உதவிக்கு அழைக்கலாம். 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் வகையில் நிறுவனத்துடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது, அது 30 நிமிடங்களுக்குள் உதவியை அனுப்பும் ”. எனக் கூறிஉள்ளார்.

இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தாவிலும் அனைத்து பெண்கள் கால்-டாக்ஸி சேவைய சகா கன்சல்டிங் விங்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

“எங்கள் கால்-டாக்ஸியில் கட்டணம் மற்ற நகர கால்-டாக்ஸிகளின் விகிதங்களுக்கு சமமானது” என்று வதேரா கூறியுள்ளார்.