புதிய மாவட்டங்களில் வரும் ஊராட்சி ஒன்றியங்கள் எவை? அரசிதழில் வெளியீடு

Read Time:2 Minute, 14 Second

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வரும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்குள் எந்தெந்த ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன என்பதற்கான பட்டியலை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் முகையூர், திருவெண்ணெய்நல்லூர், காணை, விக்கிரவாண்டி, கோலியனூர், கண்டமங்கலம், ஓலக்கூர், மயிலம், மரக்காணம், வானூர், வல்லம், மேல்மலையனூர், செஞ்சி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருவம், கல்வராயன்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நான்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு ஊராட்சி ஒன்றியங்களும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், வாசுதேவநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களும் அமைந்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமிரி, ஆற்காடு, வாலாஜாபேட்டை, காவேரிபாக்கம், நெமிலி, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.