இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி.!

Read Time:1 Minute, 55 Second

தெலங்கானா மற்றும் டெல்லியைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
சீனாவிலிருந்து திரும்பிய கேரளாவை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் இருந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இந்நிலையில், இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுடெல்லி மற்றும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பி உள்ளார். தெலங்கானாவை சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பி உள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது. அவர்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அறிய 011-23978046 எனும் உதவி எண்ணும், [email protected] என்ற மின்னஞ்சலும் வழங்கப்பட்டு உள்ளன.