சம்பளத்தில் நயன்தாராவை சமன் செய்கிறார் ராஷ்மிகா…!

Read Time:1 Minute, 48 Second

கர்நாடகத்தில் பிறந்து தெலுங்கு சினிமாவில் செம ஹிட்ஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய இளைஞர்களையே கிரங்கடித்துவருகிறார்.

இப்போது தமிழுக்குள் நுழைந்து கைநிறைய படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

23 வயதான ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடம்பிடித்தார். அலைபாயுதே மாதவன் போல் கீதா கோவிந்தம் ராஷ்மிகா இளைஞர்களின் இதயங்களில் வெகு வேகமாகவே நுழைந்துவிட்டார். ராஷ்மிகா பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில் மாஸ்டர் படத்திலேயே முதலில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்துள்ளது. ஆனால், தேதிகள் இல்லாததால் விஜய் – ராஷ்மிகா இணைந்து படம் நடிக்க முடியாமல் போனது. ஆனால், அடுத்த படத்தில் ராஷ்மிகா மிஸ் ஆகக்கூடாது என முதலிலேயே கால்ஷீட்களை கவனித்து புக் செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சம்பளத்தில் நயன்தாராவை சமன் செய்கிறார் ராஷ்மிகா என்ற தகவலும் கசிந்துள்ளது.

கிட்டத்தட்ட அரைசதத்தை எட்டி தனியொரு கதாநாயகியாக படத்தை சுமந்த பிறகே நயன்தாராவின் சம்பளம் 5 கோடிக்கு உயர்ந்தது. ஆனால், இப்போதே ராஷ்மிகாவின் சம்பளம் 4 கோடி ரூபாயாம்..!