யாருடைய குடியுரிமையும் பறிபோகாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது என்ன?

Read Time:3 Minute, 10 Second
Page Visited: 95
யாருடைய குடியுரிமையும் பறிபோகாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜனதாவின் மிகப்பெரிய கூட்டத்தில் பேசிய அமித்ஷா கலந்துக்கொண்டார்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசை வெளியேற்றும் வகையிலும், ‘இனியும் தவறான செயல்கள் வேண்டாம்’ என்ற பெயரில் பா.ஜனதா சார்பில் புதிய இயக்கம் ஒன்று நடத்தப்படுகிறது. இந்த இயக்கத்தையும் அமித்ஷா இந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மக்களின் ஆசியால் பா.ஜனதாவுக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்து உள்ளன.

மோடி அரசு வெற்றிகரமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் காரணமே மேற்கு வங்காளம்தான். என்னை பொறுத்தவரை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது என சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இருப்பினும், இச்சட்டம் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவல்களை கொடுத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. மதரீதியாக துன்புறுத்தப்பட்டதால் அகதியாக வந்தவர்களுக்கு 70 ஆண்டுகளாக குடியுரிமை வழங்க காங்கிரசால் முடியவில்லை. ஆனால், அவர்களுக்கு மோடி அரசு குடியுரிமை வழங்க முன்வரும்போது காங்கிரசும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

எனினும் அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். மாநிலத்தில் மம்தா பானர்ஜி அரசு திருப்திபடுத்தும் கொள்கை மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. எனவே 2021-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %