கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து சீனாவில் காற்று மாசு குறைந்தது..!

Read Time:1 Minute, 15 Second

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து சீனாவில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது என நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பரில் காணப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. மனிதர்கள் மூலம் எளிதாக பரவும் வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்களின் நகர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக அங்கு முடங்கியது. இதற்கிடையே தொழிற்சாலைகளில் வேலைகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் செயற்கைக்கோள் படங்கள் சீவில் காற்றில் மாசு அளவு கணிசமாக குறைந்து உள்ளன என தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த மாற்றம் என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.