சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த “கேரள பாதிரியார்” பணி நீக்கம்..!

Read Time:2 Minute, 44 Second
Page Visited: 108
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த “கேரள பாதிரியார்” பணி நீக்கம்..!

கேரளாவில் சிரோ மலபார் தேவாலய பாதிரியார் ராபின் வடக்கும்சேரி (வயது 50). கடந்த 2016-ம் ஆண்டு, கண்ணூர் மாவட்டம் கோட்டியூரில் உள்ள தேவாலய பாதிரியார் பொறுப்பையும், ஒரு பள்ளிக்கூட நிர்வாக பொறுப்பையும் கவனித்தார். அப்போது நிர்வாகத்தின் கீழ் இயங்கிய பள்ளியில் படித்த 16 வயது சிறுமியை பல முறை பலாத்காரம் செய்து, கர்ப்பம் ஆக்கினார் என்ற புகார் எழுந்தது. சிறுமிக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்ததும் அவர் கனடாவுக்கு தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் போலீசார் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை தலச்சேரியில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறுமிக்கு பிறந்த குழந்தையின் மரபணுவுடன், பாதிரியார் ராபினின் மரபணு ஒத்துப்போனது. இதனால் அவர்தான் சிறுமியை பலாத்காரம் செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆனது.

இந்த வழக்கில் அவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், அவரை பாதிரியார் என்ற தகுதியின் அடிப்படையில் மத ரீதியில் ஆற்றுகிற கடமை, பணிகளில் இருந்து நீக்கி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துகிற, பாழ்படுத்துகிற மத குருமாரை சகித்துக்கொள்ள கூடாது என்ற கொள்கையை அனைத்து பேராயர்களும் பின்பற்ற வேண்டும் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், பாதிரியார் ராபின் மீது பணிநீக்க நடவடிக்கை பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %