சீனாவிற்கு வெளியே 8 மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ்…! அமெரிக்காவில் 6 பேர் பலி

Read Time:2 Minute, 7 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸ் பரவியது. இந்த வைரஸ் அங்கிருந்து உலகில் உள்ள 70 நாடுகளுக்கும் பரவியது.

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்காக உகான் நகருக்கு 4 ஆயிரம் ராணுவ மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இதுவரை உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவில் 6 பேர் இந்த வைரசால் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்கொரியாவில் மேலும் 500க்கும் அதிகமானோருக்கு பேருக்கு உயிர்கொல்லி நோயான கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நாட்டில் 4,800க்கும் அதிகமானோருக்கு இந்த நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேபோல் வடகொரியாவில் புதிதாக 476 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உகாண்டாவிலும் 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஈரானிலும் இதுவரை 66 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவிற்கு வெளியே 8 மடங்கு வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.