பிரதமர் மோடி டுவிட்டரைவிட்டு வெளியேற மாட்டார்… அசரவைத்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

Read Time:3 Minute, 38 Second
Page Visited: 85
பிரதமர் மோடி டுவிட்டரைவிட்டு வெளியேற மாட்டார்… அசரவைத்த  ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

டுவிட்டரில் மிகவும் தீவிரமாக செயல்படும் பிரதமர் மோடி திங்கள் கிழமை வெளியிட்ட டுவிட் செய்தியில், “ இந்த ஞாயிறன்று அனைத்து சமூகவலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் இருந்து வெளியேறலாமா? என்று சிந்தித்து வருகிறேன். இது குறித்து விரைவில் உங்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார்.

உலக அளவில் அதிகமான அளவு சமூகவலைதளங்களில் ஆதரவாளர்களை கொண்ட பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக செய்தது. பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும், பேஸ்புக்கில் 44 மில்லயன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியன் பேரும், யூடியூப்பில் 4.5 மில்லியன் பேரும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை அடுத்து லட்சக்கணக்கானோர் நீங்கள் டுவிட்டரைவிட்டு வெளியேறக் கூடாது, பிரதமர் மோடி வெளியேறினால் நானும் வெளியேறுவேன் என டுவிட்டரில் #NoSir என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் இதற்கு பின்னால் இருக்கும் சஸ்பென்ஸை பிரதமர் மோடி போட்டு உடைத்து உள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மகளிர் தினத்தில் என்னுடைய சமூகவலைதள கணக்குகளை, தங்கள் வாழ்க்கை மற்றும் பணிகள் மூலம் ஊக்கமளிக்கும் பெண்களுக்கு நிர்வகிக்க தருகிறேன். இது, லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். நீங்கள் அத்தகைய பெண்ணா? அல்லது இதுபோன்ற உத்வேகம் அளிக்கும் பெண்களை உங்களுக்கு தெரியுமா? இது போன்ற ஊக்கமளிக்கும் கதைகளை #SheInspiresUs என்ற ஹேஷ்டேக் மூலமாக பகிரவும்,” எனக் குறிப்பிட்டார்.

சாதனைப் பெண்கள் குறித்து நீங்கள் எடுக்கும் வீடியோக்களை யூ டியூப்பிலும் பதிவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த பதிவிலிருந்து சிலர் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு மோடியின் சமூக வலைத்தள பக்கங்களை நிர்வகிக்க அனுமதி வழங்கப்படும். அவர்கள் தங்களின் வாழ்க்கை குறிப்பை உலகறிய பதிவிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் இப்பதவியை ஆதரிக்கும் வகையில் #SheInspiresUs என்ற ஹேஷ்டேக் மூலம் சாதனைப் பெண்களின் தகவல்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளது. லட்சக்கணக்கானோர் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %