சைவ உணவு உண்பவர்கள் சிறந்த முறையில் உடலுறவு கொள்கிறார்கள்…!ஆய்வு தகவல்..!

Read Time:4 Minute, 24 Second
Page Visited: 115
சைவ உணவு உண்பவர்கள் சிறந்த முறையில் உடலுறவு கொள்கிறார்கள்…!ஆய்வு தகவல்..!

சைவ உணவை எடுத்துக்கொள்வதில் நீங்கள் அறுவடை செய்யக்கூடிய ஒரே நன்மை எடை இழப்பு மட்டும் கிடையாது. ஒரு சுவாரஸ்யமான ஆய்வு முடிவில், சைவ உணவு உண்பவர்கள் சிறந்த காதலர்கள் மற்றும் இறைச்சி சாப்பிடுபவர்களை விட அதிக, சிறந்த முறையில் உடலுறவு கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தை தலைமை தளமாக கொண்ட Hucknall Dispatch வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், அசைவ உணவு உண்பவர்கள் சைவ உணவு உண்பவர்களுடன் ஒப்பிடும்போது படுக்கையில் சுயநலவாதிகளாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் பாலியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் மிகப்பெரிய திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு முக்கிய இணைதளமாக அறியப்படும் IllicitEncounters.com மூலம் இதற்கான ஆய்வு எடுக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட சைவ உணவு உண்பவர்கள் 500 பேரிடமும், அசைவ உணவு சாப்பிடும் 500 பேரிடமும் இதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான சைவ உணவு உண்பவர்கள் (57%) தாங்கள் வாரத்திற்கு மூன்று நான்கு முறை காதலை செய்வதாக கூறிஉள்ளனர். பெரும்பாலான இறைச்சி சாப்பிடுபவர்கள் காதல், பாலியல் உறவை வாரத்திற்கு இரண்டு முறை (49%) மட்டுமே அனுபவித்ததாக கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட 84% சைவ உணவு உண்பவர்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர், இதுவே இறைச்சி சாப்பிடுபவர்கள் 59% மட்டுமே திருப்தி அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.

அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் ஃபோர்ப்ளே மற்றும் ரசனையாக பேசுவதை அதிகம் அனுபவிக்கிறார்கள். சைவ உணவு உண்பவர்கள் பாலுணர்வை கொண்ட பண்புகளை அறியும் உணவுகளை சாப்பிடுகிறார்கள் (மக்கா, வெந்தயம் இலைகள், ஜின்ஸெங், சோம்பு.) பாலியல் உற்சாகத்தை ஊக்குவிக்கும் இயற்கையான பாலுணர்வை கொண்ட பல்வேறு காய்கறிகளும் உள்ளன, ” என Illicitencounters.com இணையதளத்தின் ஜெசிகா லியோனி அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

தாவர அடிப்படையிலான உணவு என்பது அதிக ஆற்றலை குறிக்கிறது. “பாலியல் உறவு என்பது ஒரு வயது தொடர்பான விஷயம் என்று நான் நினைத்தேன். இப்போது நான் தாவர அடிப்படையிலான உணவில் இருக்கிறேன், எனக்கு அதிக ஆற்றல் உள்ளது, மேலும் புதிய விஷயங்களை முயற்சிக்க நான் மிகவும் திறந்திருக்கிறேன், ” என சைவ உணவு சாப்பிடும் ஹீதர் (வயது 39) குறிப்பிட்டுள்ளார்.

தாவர அடிப்படையிலான உணவுகளில் துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் பி அதிகம் உள்ளன, இது லிபிடோவை அதிகரிக்கும் – வாழைப்பழங்கள், சுண்டல் மற்றும் வெண்ணெய் போன்றவை இதற்கு நல்லது. சைவ உணவு உண்பது செரோடோனின் (serotonin) அளவை அதிகரிக்கக்கூடும், இது செக்ஸ் இயக்கத்தை அதிகரிக்கும் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சைவ உணவு உடல் எடையை குறைப்பது அல்லது சுற்றுச்சூழலை காப்பாற்றுவது மட்டுமல்ல – சைவ உணவுக்கு திருப்புவது என்பது உங்கள் துணையுடனான உறவை வேகமாக்குவதற்கு உதவும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %