இந்தியா வந்த 15 இத்தாலி சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – எய்ம்ஸ்

Read Time:1 Minute, 56 Second

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் சீனாவிலிருந்து திரும்பிய கேரள மாணவர்கள் 3 பேரை கொரோனா வைரஸ் தாக்கியது. அவர்கள் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து விட்டனர். இந்த நிலையில் மேலும் 3 பேர் கொரோனா வைர சால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. இதில், ராஜஸ்தானில் இத்தாலி நாட்டு சுற்றுலா பயணி ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. நேற்று மார்ச் 2-ம் தேதி இத்தாலி பயணியின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியானது. இதனால் 4 பேர் இப்போது கொரோனா தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில், மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று (மார்ச்-3) தெரிவித்தது.

இந்நிலையில் இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 இத்தாலிய சுற்றுலாப் பயணிக்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. அவர்கள் புதுடெல்லியில் இந்திய ராணுவம் நிர்வாகம் செய்யும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.