கொரோனா வைரஸ் இத்தாலியில் 24 மணி நேரங்களில் 27 பேர் சாவு..!

Read Time:1 Minute, 36 Second

கொரோனா வைரசினால் இத்தாலியில் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 27 பேர் கடந்த 24 மணி நேரங்களில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. சீனாவைவிட உலக நாடுகளில் வேகம் காட்டுகிறது. இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு வெளியே மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. இத்தாலி, ஈரானில் சாவு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் இந்த நோயால் இறந்ததாக அந்நாட்டு மருத்துவதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இறப்பு எண்ணிக்கை இப்போது ஈரானை விட அதிகமாக உள்ளது. இத்தாலியில் மொத்தம் கொரோனா வைரசுக்கு 79 பேர் இறந்துள்ளனர். ஈரானில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிப்புக்குள்ளான இத்தாலியில் வைரசினால் 2,036 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என திங்கள் கிழமை (மார்ச் 2) தெரிவிக்கப்பட்டது. தற்போது இது 2,502 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.