வெளிநாடுகளில் இந்தியர்கள் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ்? மத்திய அரசு பதில்..!

Read Time:1 Minute, 4 Second

வெளிநாடுகளில் இந்தியர்கள் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மக்களவையில் இன்று (பிப்ரவரி 4) தெரிவித்த தகவலில், ஜப்பானில் 16 இந்தியர்களுக்கும், ஐக்கிய அரபு எமிரெட்சில் ஒரு இந்தியருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனாவிலிருந்து மொத்தம் 766 பேரை மத்திய அரசு வெளியேற்றியுள்ளது. இதில் 43 பேர் வெளிநாட்டவர்கள். ஜப்பானில் வைரஸ் பாதிப்பில் சிக்கிய சொகுசு கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். சீனாவிலிருந்து மக்களை வெளியேற்ற இரு விமானங்கள் இயக்கப்பட்டது, ரூ. 5.98 கோடி செலவாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.