பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? மத்திய அரசு பதில்..!

Read Time:1 Minute, 28 Second
Page Visited: 98
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? மத்திய அரசு பதில்..!

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு ஆன செலவு எவ்வளவு என்பது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டது.

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு மேற்கொண்டதால் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு என்பது தொடர்பான கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மக்களவையில் இன்று (பிப்ரவரி 4) பதில் அளித்து உள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ. 446.52 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சர் முரளிதரன் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2015-16ம் ஆண்டில் ரூ. 121.85 கோடி செலவாகியுள்ளது. 2016-17-ம் ஆண்டு ரூ. 78.52 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில், ரூ. 99.90 கோடி செலவாகும், 2018-19-ம் ஆண்டில் ரூ. 100.02 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2019-20ம் ஆண்டில், பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ. 46.23 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %