ஊழல் செய்த அரசு அதிகாரிகள் 320 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்…

Read Time:52 Second

ஊழல் செய்த அரசு அதிகாரிகள் 320 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மேற்கண்ட தகவலை மத்திய பணியாளர் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்தர் சிங் மக்களவையில் ஊழல் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்களை வெளியிட்டார்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், ஏறத்தாழ 320 ஊழல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு வழங்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளது.

அவர்களில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் உள்பட ‘ஏ’ பிரிவு அதிகாரிகள் 163 பேரும் ‘பி’ பிரிவு அதிகாரிகள் 157 பேரும் அடங்குவர் என தெரிவித்து உள்ளார்.