தமிழக எம்.பி. உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… சபாநாயகர் உத்தரவு

Read Time:3 Minute, 21 Second
Page Visited: 83
தமிழக எம்.பி. உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… சபாநாயகர் உத்தரவு

நாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி. மாணிக்கம் தாக்கூர் உட்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடங்கி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் கோஷம் எழுப்பி வருகிறது. ஹோலிக்கு அடுத்த நாள் மார்ச் 11-ம் தேதியன்று விவாதத்திற்கு சபாநாயகர் உறுதியளித்தார்.

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மோதலில் ஈடுபட்டு காகிதங்களை சபாநாயகரை நோக்கி வீசினர். திங்கள்கிழமை சலசலப்புக்கு பின்னர் சபையின் சீரான செயல்பாட்டிற்கு சில அடிப்படை விதிகளை வகுக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டினார். செவ்வாயன்று, உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இருதரப்புக்கு எச்சரிக்கையை விடுத்தார்.

சபாநாயகர் இருக்கையில் ரமாதேவி அமர்ந்து அவையை நடத்திய போது அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சில பேப்பர்களை சபாநாயகரை நோக்கி வீசினர். இந்த விவகாரம் தொடர்பாக பின்னர் சபாநாயகரின் கவனத்துக்கு பா.ஜனதா எம்.பி.க்கள் கொண்டு சென்றனர். இதனையடுத்து அவை நடவடிக்கையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தமிழகத்தை சேர்ந்த எம்.பி. மாணிக்கம் தாக்கூர் உட்பட, கவுரவ் கோகை, டி.என்.பிரதாபன், தீன்கொரியா கோஷ், உன்னிதன், குர்ஜித்சிங், பென்னி பெஹ்னான் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவாக பிறப்பித்து உள்ளார்.

“சபாநாயகரிடம் இருந்து ஆவணங்களை பறிப்பது மிகவும் அவமரியாதை செய்யும் செயலாகும். சபாநாயகரிடம் இருந்து ஆவணங்களை பறித்தவர்களின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும்,” என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தியிருந்தார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %