வங்கதேசிகளும் இந்திய குடிமக்கள்தான் மம்தா பேசியது என்ன? 7 பாயிண்ட்ஸ்…!

Read Time:1 Minute, 57 Second

* பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்த இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து உள்ளது.

* இதற்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறது.

* மேற்கு வங்காளத்தில் சட்டத்திற்கு எதிராக சாலையில் இறங்கி பேரணியை மேற்கொண்ட, மம்தா பானர்ஜி, தொடர்ந்து சட்டத்திற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்.

* டெல்லி கலவரம் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்கையில், கலவரம் அரசால் ஸ்பான்சர் செய்யப்பட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றார்.

* பிப்ரவரி 3-ம் தேதி கொல்கத்தாவில் கட்சி கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வாழும் எந்த அகதிகளும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்றார்.

* வங்காள தேசத்திலிருந்து வந்த அனைவரும் இந்திய குடிமக்கள்தான். அவர்களுக்கு குடியுரிமை கிடைத்து உள்ளது. தேர்தலில் வாக்களித்து உள்ளனர் என கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.

* டெல்லியில் நடைபெற்றதை இங்கு நடைபெறவிட மாட்டேன். மேற்கு வங்காளம் மற்றொரு டெல்லியாகவோ அல்லது மற்றொரு உத்தரப்பிரதேசமாகவோ மாற நாங்கள் விரும்பவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.