‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’ வைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்…!

Read Time:2 Minute, 9 Second
Page Visited: 84
‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’ வைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்…!

சாவித்திரி வாழ்க்கை கதையை வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளார். கடைசியாக விஜய் ஜோடியாக சர்கார் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் 2018 நவம்பரில் திரைக்கு வந்தது. அதன் பிறகு படங்கள் இல்லை.

தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் பென்குயின் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தி படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இந்தி ரசிகர்கள் ஒல்லியான நடிகைகளையே விரும்புகிறார்கள் என்று கருதி கீர்த்தி சுரேசும் உடல் எடையை கணிசமாக குறைத்து ஆளே மாறினார். ஆனால், கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இல்லை என்று அந்த படத்தில் இருந்தே நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாரம்பரிய மலையாள பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் கீர்த்தி சுரேசின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் கீர்த்தின் அழை மெச்சி வருகிறார்கள்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்ற சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அந்த படத்தின் புகைப்படம்தான் இது என்று கூறப்படுகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %