கொரோனா வைரஸ்: டெல்லியில் அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டது.!

Read Time:1 Minute, 10 Second

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் என அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச் 31-ம் தேதி வரையில் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது என அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

டெல்லியில் இத்தாலியில் இருந்து வந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. குர்கானில் பேடிஎம் ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 16 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு உலகெங்கிலும் 3,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 95,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.