பாலியல் பலாத்கார வழக்கு: நித்யானந்தா சொத்துகளை முடக்க நீதிமன்றம் நடவடிக்கை…

Read Time:3 Minute, 34 Second
Page Visited: 78
பாலியல் பலாத்கார வழக்கு: நித்யானந்தா சொத்துகளை முடக்க நீதிமன்றம் நடவடிக்கை…

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் தலைமை தியன பீடம் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ளது. அங்கு நித்தியானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார், நித்யானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் சிறையில் இருந்து நித்யானந்தா வெளியே வந்தார். ஆனால் பாலியல் வழக்கில் ராமநகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா 2 ஆண்டுக்கும் மேலாக ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

இந்த வழக்கு பிப்ரவரி 19-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தாவின் ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்ததால், அவருக்கு கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி சித்தலிங்க பிரபு உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (மார்ச் 4) ராமநகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதால் நித்யானந்தாவின் சொத்துகள் முடக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. மேலும் நித்யானந்தாவுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்களையும், அவரது ஆசிரமத்திற்கு சொந்தமான சொத்து விவரங்களையும் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய தினம் நித்யானந்தாவின் சொத்துகளை முடக்குவது குறித்து ராமநகர் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், நித்யானந்தா சாமியாரை கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே நித்யானந்தாவை கைது செய்ய மத்திய அரசின் மூலமாக ப்ளூ கார்னர் நோட்டீசு பிறப்பித்திருந்தனர். இந்த நிலையில், நித்யானந்தா வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால், மத்திய அரசின் மூலமாக சர்வதேச போலீசாரின் உதவியை நாட நித்யானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசு பிறப்பிக்க கோரி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கர்நாடக போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %