டெல்லி கலவரம்: ஷாருக் கைதில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாயிண்ட்ஸ்…!

Read Time:2 Minute, 0 Second

* டெல்லியில் பிப்ரவரி இறுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராடியவர்கள் மோதிக்கொண்டதால் கலவரம் வெடித்தது.

* கலவரத்தில் 48 பேர் உயிரிழந்து உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* கலவரம் தொடர்பாக இதுரை 1,427 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர், 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

* டெல்லி மஜ்பூர் பகுதியில் கலவரத்தின் போது இளைஞர் ஷாருக் துப்பாக்கி சூடு நடத்தியதும், போலீசாரை மிரட்டியதும் புகைப்படமாக வெளியாகியது.

* தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் புகைப்படங்கள் வெளியானதும் இளைஞர் தலைமறைவு ஆகிவிட்டார்.

* டெல்லி சிறப்பு படை போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டதில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி நகரில் இளைஞர் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

* இதனையடுத்து பிப்ரவரி 3-ம் தேதி அங்கு சென்ற டெல்லி சிறப்புபடை போலீசார் இளைஞர் ஷாரூக்கை கைது செய்தது.

* விசாரணையின் போது ஆத்திரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஷாருக் தெரிவித்து உள்ளார். இதற்கு முன்னதாக அவர்மீது எந்தஒரு கிரிமினல் வழக்கும் பதிவாகவில்லை.

* துப்பாக்கி சூடு நடத்தியது, மிரட்டியது தொடர்பான வீடியோவை காட்டிய கேள்விகளை எழுப்பிய போது அவர் பதில் அளிக்காமல் நின்று உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

* டெல்லி கலவரத்தில் ஷாரூக் பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்ய வேண்டியதுள்ளது.