புல்வாமா தாக்குதல் விசாரணையில் முக்கிய நகர்வு… தெரிந்து கொள்ள வேண்டிய 8 பாயிண்ட்ஸ்…!

Read Time:1 Minute, 46 Second

* காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 2019 பிப்ரவரி 14-ல் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஆதில் அகமது தார் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.

* இதனையடுத்து இந்திய அரசு பதிலடி நடவடிக்கையாக விமானப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்குள் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை அழித்தது.

* பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொள்கிறது.

* தற்போது தாக்குதல் தொடர்பாக ஹக்ரிபோராவில் தாரிக் அகமது ஷா (வயது 50) மற்றும் அவரது மகள் இன்ஷாவை (வயது 23 ) கைது செய்துள்ளனர்.

* புல்வாமாவில் இவர்களுடைய வீட்டில்தான் பயங்கரவாதி ஆதில் அகமது தார் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் இருந்துள்ளனர்.

* புல்வாமா தாக்குதல் நடத்தியதும் பாகிஸ்தானில் இருந்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. பயங்கரவாதி ஆதில் அகமது தாரால் எடுக்கப்பட்ட அந்த வீடியோ, தாரிக் அகமது ஷாவின் வீட்டில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

* இன்ஷா வீட்டில் இருந்த பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் பிற வசதிகளை செய்து கொடுத்துள்ளார் என தேசிய புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணையை தேசியப் புலனாய்வு பிரிவு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.