பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை சிதறடிக்கும் ஏவுகணை… இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்..!

Read Time:1 Minute, 45 Second

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புக்கள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக இருக்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு, பாதுகாப்பு நடவடிக்கையால் பயங்கரவாத தாக்குதல் குறைந்து உள்ளது. இருப்பினும் எல்லையில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய ராணுவத்தின் கவனத்தை திசைத்திருப்பி பயங்கரவாதிகளை நுழைய செய்ய பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்கிறது. இந்நிலையில் குபுவாரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து ராணுவ டாங்கிகளை சிதறடிக்கும் ஏவுகணைகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தி உள்ளது.

ராணுவ டாங்கிகளை சிதறடிக்கும் ஏவுகணை தாக்குதல்

ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ செய்ய அடிக்கடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.