கொரோனா வைரஸ் பாதிப்பு, நெருக்கடியான நிலையில் ஈரான்…!

Read Time:1 Minute, 15 Second

ஈரானில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாவிற்கு எதிரான அந்நாட்டின் போராட்டம் சற்றும் பலன் அளிக்காமல் செல்கிறது.

இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,922 ஆக உயர்ந்து உள்ளது. அதிகப்பட்சமாக தெக்ரானில் 1043 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய் பரவுவதை எதிர்த்து போராடும் ஈரான் நெருக்கடியான சிறைகளில் இருக்கும் 54,000-க்கும் மேற்பட்ட கைதிகளை தற்காலிகமாக விடுவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாதுகாப்பு கைதிகள் வெளியே விடப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகெங்கிலும் 93,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் அதிகமான எண்ணிக்கை சீனாவிலாகும். இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவில் இறப்புகள் வேகமாக பதிவாகி வருகிறது.