தமிழ் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவேன்… பூஜா ஹெக்டே சஸ்பென்ஸ்…?

Read Time:2 Minute, 7 Second

தமிழில் முகமூடி படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

அப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது, ஆனால் நல்லவேளையாக தப்பிவிட்டார். ஜீவாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். அதன்பின்னர் தமிழ்படங்களில் காண முடியவில்லை.

ஆனால் இந்தி, தெலுங்கு படங்களில் ஹிட் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.

அவர் நடிக்கும் தெலுங்குப் படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் அங்கு அவருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இதற்கிடையே தமிழில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு மதிப்பளித்து டுவிட்டரில் பதில் கூறியுள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நான் தமிழ் படங்களில் நடிக்கவேண்டும் என்கிற ரசிகர்களின் கோரிக்கையை படித்து வருகிறேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மனத்தை தொடுகிறது. தமிழ்ப் படங்களில் நடிக்க நான் முயன்று வருகிறேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். நல்ல கதை அமைவதற்காக காத்திருக்கிறேன். அதனால் இந்த இடைவெளியும் தாமதமும் ஏற்பட்டுள்ளது. விரைவில் என்னை தமிழ்ப் படங்களில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே தமிழ் படத்தில் விரைவில் நடிக்க உள்ளதற்கான சஸ்பென்ஸ் தான் அவருடைய டுவிட்டிற்கு பதிலா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே ரசிகர்கள் பூஜா, சூர்யா அல்லது விஜய்க்கு ஜோடியாக தமிழ் படத்தில் நடிக்கலாம் எனவும் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்கள்.