பிட்காயின் வர்த்தகத்துக்கு தடை நீக்கம்… ரிசர்வ் வங்கியின் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.

Read Time:2 Minute, 50 Second
Page Visited: 54
பிட்காயின் வர்த்தகத்துக்கு தடை நீக்கம்… ரிசர்வ் வங்கியின் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பாணை ஒன்றில் பிட்காயின் என்னும் மெய்நிகர் டிஜிட்டல் கரன்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிராக இன்டர்நெட் அண்டு மொபைல் அசோஷியேசன் ஆப் இந்தியா என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், கிரிப்டோகரன்சி (பிட் காயின்) என்பது ஒரு பண்டம். அதனை நிதி (கரன்சி) என்று கருத முடியாது. ரிசர்வ் வங்கிக்கு பணம் தொடர்பான விவகாரங்களில் மட்டுமே தலையிட அதிகாரம் உள்ளது. தற்போதைய நிலையில் கிரிப்டோகரன்சி தொடர்பாக எந்தவித முறையான சட்டங்களும் இயற்றப்படவில்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கி இப்படி தன்னிச்சையாக அதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், ரிசர்வ் வங்கி வாதிடுகையில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் கிரிப்டோகரன்சி குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வகையிலும் கவனமாக செயல்பட்டு வருகிறது. கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் ஒரு பிரிவாகும். அதனை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால், நாட்டில் பணப் பரிமாற்ற முறையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பொதுநலனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியால் கிரிப்டோகரன்சி குறித்து உரிய முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்ததும் உச்சநீதிமன்றம் மார்ச் 4-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் வர்த்தகம் செய்யலாம் எனவும், வங்கிகளும் கிரிப்டோ கரன்சி மூலம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %