அமெரிக்காவில் கொரோனா சோதனை கருவிகள் போதிய அளவு இல்லை…!

Read Time:3 Minute, 0 Second
Page Visited: 70
அமெரிக்காவில் கொரோனா சோதனை கருவிகள் போதிய அளவு இல்லை…!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 20 மாகாணங்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான சோதனை கருவிகளுக்கு அமெரிக்காவில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதனை மறுத்த உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான், இந்த வார இறுதிக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா சோதனை கருவிகள் தயாராக இருக்கும் என்றார். இந்த நிலையில், கொரோனா தொற்றை கண்டறிய போதுமான சோதனை கருவிகள் இல்லை என்று வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டு உள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான தலைவருமான மைக் பென்சும் இதை உறுதிப்படுத்தினார்.

கொரோனா தாக்கம் குறித்து, வெள்ளை மாளிகையில் நடந்த அவசர கூட்டத்துக்கு பின், பத்திரிகையாளர்களிடம் பென்ஸ் பேசுகையில் இதனை தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை. தற்போது, 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகள் தேவையுள்ளது. அவற்றை ஒரு வாரத்திற்குள் தருமாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ஆனால் அது சாத்தியமில்லை. அவற்றை ஒரு வாரத்துக்குள் தயாரிக்க இயலாது. எனினும் சோதனை கருவிகள் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்த இன்னும் வழிகள் உள்ளன. அதே சமயம் அடுத்த வார இறுதிக்குள் நாடு முழுவதும் சோதனை கருவிகளை வினியோகிக்க முடியும் என்பதை உறுதியாக கூறலாம் எனக் கூறியுள்ளார்.

இதனிடையே கொரோனா தாக்கத்தை சமாளிக்க பெரும் அவசர நிதியாக சுமார் ரூ.61 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %