திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் காலமானார்!

Read Time:2 Minute, 3 Second
Page Visited: 57
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் காலமானார்!

தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க. அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.

தி.மு.க. தொண்டர்களால் ‘இனமான பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்ட க.அன்பழகன், முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலேயே ஓய்வு பெற்றுவந்தார். வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், பல மாதங்களாக அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. கடந்த மாதம் 24-ந்தேதி அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று, நள்ளிரவு 1.10 மணி அளவில் அன்பழகன் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து க. அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைவு குறித்து, உங்களது அறிவொளியில் எங்கள் பயணம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %