அமெரிக்காவையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 20-ஐ எட்டியது

Read Time:1 Minute, 34 Second

கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 97 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நாடுகளில் இதுவரை 1,02,180 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 3500-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 330 ஆகவும், சாவு எண்ணிக்கை 19 ஆகவும் உயர்ந்திருக்கிறது. வைரஸ் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டு சுகாதரத்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

இதற்கிடையே ஹவாயில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சென்ற டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்த 19 ஊழியர்கள், 2 பயணிகள் என 21 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுமார் 2,400 பயணிகள், 1,100 ஊழியர்களுடன் வந்துள்ள இந்த கப்பலின் பயணிகள் யாரும் கப்பலில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. தங்கள் நாட்டில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கப்பலால் இருமடங்காக உயர்வது தனக்கு தேவையில்லை என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். இது நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது. அமெரிக்காவையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கிறது.