சிஏஏ எதிர்ப்பு போராட்டம்… டெல்லி ஜாமியாவில் பயங்கரவாத செயலுக்கு திட்டமிட்ட தம்பதியினர் கைது…!

Read Time:2 Minute, 32 Second
Page Visited: 50
சிஏஏ எதிர்ப்பு போராட்டம்… டெல்லி ஜாமியாவில் பயங்கரவாத செயலுக்கு திட்டமிட்ட தம்பதியினர் கைது…!

குடியுரிமை திருத்தச் சட்டத்தினை பயன்படுத்தி பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புக்கொண்ட தம்பதியை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராவும் போராட்டம் நடத்தியவர்கள் மோதிக்கொண்டதால் பெரும் கலவரம் வெடித்தது. இதில், 50க்கும் அதிகமானோர் பலியாகினர். இதற்கிடையே கலவரம் தொடர்பான விசாரணை டெல்லி போலீசால் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி ஜாமியா பகுதியில் காஷ்மீரை சேர்ந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தற்போதைய போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய இளைஞர்களை தூண்டுவதற்கான வேலையை செய்து உள்ளனர். அவர்கள் இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருந்து உள்ளனர் என விசாரணையில் இடம்பெற்று உள்ள அதிகாரி தெரிவித்து உள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்த ஜஹான்சாயிப் சமி மற்றும் அவருடய மனைவி ஹினா உளவுத்துறையின் வளையத்திற்கு வந்துள்ளனர், இதனையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே “ஜனநாயகம் உங்களை காப்பாற்றப் போவதில்லை ” என பயங்கரவாத அமைப்பின் பத்திரிக்கையில் சிஏஏ பற்றி செய்தி வெளியாகியுள்ளதாகவும் உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜஹான்சாயிப்பிற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %