இந்தியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ்… பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

Read Time:1 Minute, 8 Second

இந்தியாவில் வெளிநாடு சென்று வந்தவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

புதியதாக கேரளாவில் மூன்று வயது குழந்தைக்கும், ஜம்மு, டெல்லி, உ.பி.யில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கேரளாவில் இத்தாலி சென்றுவந்த 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதேபோன்று ஜம்முவில் ஈரானிலிருந்து திரும்பிய 63 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

ஜம்மு காஷ்மீர்1
லாடக்2
அரியானா1
டெல்லி3
உத்தரபிரதேசம்8
ராஜஸ்தான்17
தெலுங்கானா1
தமிழகம்1
கேரளா9 (மூன்று பேர் குணமாகிவிட்டனர்)
மொத்தம் 43 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.