கொரோனா வைரஸ் பாதிப்பு: நிலவேம்பு கசாயத்தையும் பயன்படுத்தும் சீனர்கள்..!

Read Time:2 Minute, 14 Second

கொரோனா வைரசால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சீனாவில் இந்திய உணவு பழக்கவழக்கங்கள் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

இந்தியாவில் டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு கசாயம் பெரிதும் உதவியது.

தற்போது கொரோனாவிற்கும் இது பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், மருத்துவ ரீதியில் உறுதியாகவில்லை. இருப்பினும், தடுப்பு மருந்தாக இருக்கும் என சீனாவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மசாலா உணவுகளையும், நிலவேம்பு கசாயத்தையும் சீனர்கள் விரும்பு சாப்பிடுகின்றனர் என தெரியவந்துள்ளது. சீனாவின் ஹாங்காங் நகரிலும் 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற செய்தி சீனர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்கள் தற்போது இந்திய உணவு வகைகளை விரும்பி உண்கின்றனர் என தெரியவந்து உள்ளது.

தற்போது இட்லி, தோசையை தவிர்த்து இந்தியர்களின் கறி வகைகளை சீனர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். குறிப்பாக மஞ்சள், கிராம்பு, லவங்கம் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு ஒரு வித்தியாசமான ருசியை கொடுத்து உள்ளது. ஹாங்காங்கில் இந்தியர்கள் நடத்தும் கடைகளில் உணவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தென்னிந்திய உணவகம் ஒன்றில் நில வேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதில் உள்ள மருத்துவ குணங்களையும் விவரிக்கிறோம் என புதிய தலைமுறைக்கு பேட்டியளித்து உள்ள நிர்வாகம், நிலவேம்பு கசாயம் கசப்பாக இருந்த போதிலும் அவர்கள் அதனை விரும்பி குடிக்கின்றனர் என தெரிவித்து உள்ளது.