வெற்றியை நோக்கி பா.ஜனதாவின் ‘காங்கிரஸ் இல்லாத பாரதம் திட்டம்’… முக்கிய விக்கெட் அவுட்…!

Read Time:4 Minute, 6 Second
Page Visited: 144
வெற்றியை நோக்கி பா.ஜனதாவின் ‘காங்கிரஸ் இல்லாத பாரதம் திட்டம்’… முக்கிய விக்கெட் அவுட்…!

2014 தேர்தலுக்கு பின்னர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலும் படுதோல்வியையே காங்கிரஸ் தழுவிவருகிறது.

6 வருடங்களில் பஞ்சாப், சத்தீஷ்கார் தவிர்த்து வேறு எந்த மாநில தேர்தல்களிலும் சொல்லும்படியாக பெரும்பான்மை வெற்றி கிடையாது. 2018 இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை பா.ஜனதாவிடம் இருந்து பறித்தது. ஆனால், நூலிழையில் தான் ஆட்சி காங்கிரஸ் வசம் சென்றது. இரு மாநிலங்களிலும் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடையாது. ஆனால், பா.ஜனதாவை விட சில தொகுதிகளில் அதிகமாக வென்று சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகளை கொண்டு ஆட்சி அமைத்து உள்ளது.

மத்திய பிரதேசம்

228 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 115 எம்.எல்.ஏ.க்கள் தேவையாகும். காங்கிரஸ் 114 தொகுதிகளில் வென்றது. பா.ஜனதா, 107 தொகுதிகளில் வென்றது.

காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகளை கொண்டு ஆட்சியமைத்தது. இங்கு 15 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக காங்கிரஸை வளர்க்க தீவிர முயற்சியை மேற்கொண்டவர் ஜோதிராதித்ய சிந்தியா. கிராம், கிராமாக சென்று கட்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார். ஆனால், அவருக்கு முதல்-அமைச்சர் பொறுப்பை காங்கிரஸ் தலைமை வழங்கவில்லை. காங்கிரசில் இளம் தலைவர்களுக்கு இடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

சோனியா காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராக அறியப்பட்ட கமல்நாத்திற்கு அப்பதவி வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என பார்க்கப்பட்டது. அதையும் தடுத்தார் கமல்நாத். இதேபோன்று, மாநிலத்தில் விரைவில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒரு சீட் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கும் கமல்நாத் செக் வைத்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை காணவில்லை, அவர்களை பா.ஜனதா கடத்திவிட்டது என கமல்நாத் கூப்பாடுபோட்டார். ஆனால், அவர்கள் திரும்பினார்கள். இதனால் ஆட்சிக்கு ஒரு பங்கமும் இல்லையென கமல்நாத் இருந்த போது, ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய எம்.எல்.ஏ.க்களை திரட்டி அரசை அசைக்க செய்துவிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர். இதனால் கமல்நாத் அரசு கலைகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் இல்லாத பாரதம் என பா.ஜனதா முழங்கி வருகிறது. அதற்கு முக்கிய நகர்வாக மத்திய பிரதேச அரசியல் சூழல் உள்ளது. இதற்கிடையே ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார். அவர் பா.ஜனதாவில் விரைவில் இணைய உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %