இத்தாலியை முடக்கிய கொரோனா வைரஸ்… 897 பேர் உயிரிழப்பு.!

Read Time:1 Minute, 37 Second

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவை அடுத்து தற்போது இத்தாலி மற்றும் ஈரானில் கொரானா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில் ஒரேநாளில் 196 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இத்தாலி செய்வறியாது திகைத்து நிற்கிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இனிவரும் நாட்களில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இத்தாலி பிரதமர் சியூசெப் கோண்டே உத்தரவிட்டுள்ளார். அதன்படி மருத்துவம் மற்றும் பிற முக்கிய பணிகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாடே முடங்கியுள்ளது.