பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது – சிந்தியா புகழாரம்..!

Read Time:4 Minute, 15 Second

மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜனதாவை தோற்கடித்து 2018-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 230 இடங்களை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்ட சபைக்கு 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில் 114 இடங்களை வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 109 இடங்கள் கிடைத்தன. சமாஜ்வாடி கட்சியின் 1 எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம். எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் என 121 பேரின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. காங்கிரசுக்கு இந்த வெற்றியை பரிசாக்கியவர் ஜோதிராதித்ய சிந்தியா.

எனவே, முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத்துக்கும், இளைய தலைவரும், குவாலியர் அரச குடும்பத்தை சேர்ந்தவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில், மேலிடத்தின் ஆதரவுடன் கமல்நாத் முதல்வர் பதவியை பிடித்தார். அதைத் தொடர்ந்து மாநில கட்சி தலைவர் பதவியை, அவரிடம் இருந்து கைப்பற்ற ஜோதிராதித்ய சிந்தியா முயற்சித்தும் அதில் வெற்றி கிடைக்கவில்லை. அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைப்பதையும் கமல்நாத் தடுத்துந் இறுத்தினார்.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் அவரது ஆதரவு மந்திரிகள் 6 பேர் ஓரங்கட்டப்பட்டனர். இது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை அதிருப்தியின் உச்சத்துக்கு அழைத்து சென்றது. இதற்கிடையே அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 26-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தலா ஒரு இடத்தை எளிதாக கைப்பற்ற முடியும். முன்றாவது இடத்தை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி விரும்புகிறது.

அதற்கு அந்த கட்சிக்கு கூடுதலாக 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழலில், ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 17 பேரும் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து காங்கிரசில் பதவியை ராஜினாமா செய்த சிந்தியா, பா.ஜனதாவில் இணைந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, தேசத்துக்கு சேவையாற்ற சிறந்த நடைமேடை பா.ஜனதா எனக்கு கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன். பிரதமருக்கு நன்றி.

பிரதமர் மோடியை தவிர வேறு எந்த அரசும் இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி வெற்றி பெற்றது கிடையாது. ஒருமுறை அல்ல இருமுறை. மக்களின் இந்த நம்பிக்கையை நேர்மறையான செயல்பாட்டு முறையுடன் பிரதமர் பணியாற்றும் விதம்,

இந்தியாவுக்கு மோடி ஏற்படுத்தியிருக்கும் பன்னாட்டு மரியாதை, திட்டங்களை செயல்படுத்திய விதம், நான் நினைக்கிறேன் நாடு பாதுகாப்பான கரங்களில் இருப்பதாக என்று.

சிந்தியா

என்னுடைய முந்தைய கட்சியில் மக்களுக்கு என்னால் சேவையாற்ற முடியவில்லையே என்று விரக்தியில் நொந்து போனேன். மக்களுக்கு சேவையாற்றுவதே என்னுடைய குறிக்கோள் அதற்கு அரசியல் ஒரு வழிமுறை அவ்வளவே. காங்கிரஸ் மூலம் இந்த குறிக்கோளை நான் எட்ட முடியாது மத்திய பிரதேசத்துக்கான எங்களது கனவுகள் 18 மாதங்களில் சிதிலமடைந்து விட்டது என்றார்.