ஹாலிவுட் நடிகைகளை பலாத்காரம் செய்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை

Read Time:1 Minute, 54 Second
Page Visited: 40
ஹாலிவுட் நடிகைகளை பலாத்காரம் செய்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது. #MeToo (மீ டூ)வில் அவருக்கு எதிராக பல்வேறு அதிர்ச்சிக்கரமான புகார் கூறப்பட்டதும் விசாரணை தீவிரம் பெற்றது.

ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள். 2006-ம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவரும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மான்காட்டன் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. பின்னர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை காலத்தை குறைக்கும்படி ஹார்வி தரப்பில் விடுத்த கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்து விட்டது. இந்த தீர்ப்பு ஹாலிவுட் பட உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %