இப்போது எல்லாம் அசைவத்திற்கு ‘நோ’… ராஷ்மிகா மந்தனா

Read Time:3 Minute, 0 Second
Page Visited: 189
இப்போது எல்லாம் அசைவத்திற்கு ‘நோ’… ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படம் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இயல்பான தோற்றம், செயலால் அனைவரையும் கவர்கிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக அக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மீம்ஸ்களை கூட ரசித்து கமாண்ட் தெரிவிக்கிறார்.

தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாகவும், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

சினிமாவில் எப்போதும் ஒரே மாதிரி சூழல் இருக்க வாய்ப்பு இல்லை. நடிக்கும் கதை, கதாபாத்திரங்கள் மனதில் ஓடும்போது அதே மாதிரியான உணர்வுக்கு நான் மாறி விடுவோம். நடித்து முடித்த பிறகு ரொம்ப கலாட்டா செய்வது என்னுடைய வாடிக்கை. பின்னர் பொறுமையாக இருக்கும் கதாநாயகர்கள் கூட என்னுடன் சேர்ந்து கும்மாளம் போட ஆரம்பித்து விடுவார்கள். இப்படியான நிறைய சந்தோஷமான தருணங்கள் படப்பிடிப்பு தளத்தில் வந்து போய் இருக்கிறது. அதனால் தான் என்னால் எப்போதும் உற்சாகமாக வேலை செய்ய முடிகிறது.

நான், கடந்த 6 மாதமாக அசைவ உணவு சாப்பிடுவது இல்லை. எனக்கு அசைவம் என்றால் அதிக பிரியம். ஆனாலும் முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். இப்போது கதாநாயகி என்ற நட்சத்திர அந்தஸ்தில் நான் இருக்கிறேன். படிப்படியாக முன்னேறாமல் வந்ததுமே ஒரேயடியாக இந்த உயரமான இடத்துக்கு வந்து விட்டேன். இதை தக்க வைக்க, தொடர்ந்து இந்த இடத்திலேயே நீடிக்கவும் நன்றாக நடித்தால் மட்டும் போதாது. உடல் தோற்றமும் நன்றாக இருக்க வேண்டும்.

இஷ்டத்துக்கு உணவை உள்ளே அனுப்பி எடை கூடினால் பின்னர் குறைப்பது கஷ்டம். எனவே, சைவம் சிறந்தது என்று முடிவு செய்தேன். வாழ்நாள் முழுவதும் சைவமாகவே இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன் என ராஷ்மிகா கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %