தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,152 சரிவு….!

Read Time:2 Minute, 23 Second

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உயர்ந்து காணப்பட்டது.

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வரலாறு காணாத உயர்வை தங்கம் விலை எதிர்க்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதலீடுகள் தங்கத்தை நோக்கி சென்றதால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஸ்திரத்தன்மையற்ற நிலையில் காணப்பட்டது. ஒரு நாள் விலை அதிகரித்தும் மறுநாள் விலை குறைந்தும் வர்த்தகம் காணப்பட்டது. இந்த நிலையில் 12-ம் தேதி தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று 13-ம் தேதியும் அதன் விலை அதிரடியாக சரிந்தது.

12-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 157-க்கும், ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 256-க்கும் விற்பனையானது. நேற்று 13-ம் தேதி மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.144-ம், பவுனுக்கு ரூ.1,152-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 13-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 104-க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை பெருமளவில் குறைந்து இருப்பது இதுதான் முதல்முறை என பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஒரே நாளில் இந்த அளவுக்கு சரிந்தது கிடையாது.

கொரோனா வைரஸ் பீதியால் உலக நாடுகளில் அனைத்து வர்த்தகமும் பெரிதும் தடைபட்டு உள்ளது. உலக நாடுகள் இடையே போக்குவரத்து ஸ்தம்பித்து போய் உள்ளதால் பல நாடுகளில் தங்கத்தின் வர்த்தகம் நடைபெறவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து இருக்கிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை சரிந்து காணப்படுகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலை அதிகளவில் உயருவதும், அதிகளவில் குறைவதுமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இன்றும் அதிரடியாக குறைந்த தங்கம் ஒரு கிராம் 3934க்கும் ஒரு சவரன் 31472 க்கு விற்பனை ஆகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Rs. 3934.00